சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (ஜனவரி 6) புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி வந்தனர்.
அப்போது, சென்னையை சேர்ந்த 2 பெண் பயணிகள் இந்த விமானத்தில் இலங்கை செல்ல வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர்களை பெண் சுங்க அதிகாரிகள் 2 பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவர்கள் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த அமெரிக்கா டாலர் மற்றும் யூரோ கரன்சி ஆகிய வெளிநாட்டு பண கட்டுகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.