தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடனுக்குடன்: இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர்! - Tamil Nadu Legislative Assembly Session

Third day of Tamil Nadu Legislative Assembly Session
Third day of Tamil Nadu Legislative Assembly Session

By

Published : Feb 27, 2021, 10:12 AM IST

Updated : Feb 27, 2021, 3:13 PM IST

14:09 February 27

"மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுகிறது" 

- சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அறிவிப்பு

14:07 February 27

சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வாழ்த்துகள்

- சட்டப்பேரவைத் தலைவர் தனபால்

14:06 February 27

"அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெறும்"

- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

13:45 February 27

அரசுக்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மனமார்ந்த நன்றி. அதிமுக அமைச்சர்கள் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று ஆட்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 

12:16 February 27

"தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ரூ.102.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது"

- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

11:48 February 27

2020-21ஆம் ஆண்டுகளுக்கான இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் 21 ஆயிரத்து 172.82 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் வழி வகை செய்யப்படுகின்றன. அவற்றில் 17 ஆயிரத்து 790 கோடி வருவாய் கணக்கிலும், 3 ஆயிரத்து 381 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

11:39 February 27

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூடுதல் செலவினத்திற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 

11:28 February 27

"மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியும், அதிக மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்தும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தும், மாணவர்களை தேர்ச்சி என அறிவித்தும் ஒரு மாணவராக, மருத்துவராக, விவசாயியாக அவதாரம் எடுத்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி"
 

- அமைச்சர் விஜயபாஸ்கர்

11:07 February 27

அமைச்சர் காமராஜ் கரோனாவால் பாதிக்கப்பட்டது அறிந்து வேதனை அடைந்தேன், அவர் குணமடைந்து இந்த அவையில் பதிலளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

- சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பேச்சு

10:34 February 27

"2011, 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டு முறையாக அமைச்சராக பதவி வகித்து வருகிறேன். ஜனவரி 5ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டேன். என் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதலாக இருந்தார். அவரும் அமைச்சர்களும் கூறியது போலவே நான் குணமடைந்து உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கிறேன்''

- உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க பேச்சு 

10:28 February 27

"தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடைசி கேள்விக்கு பதிலளிக்கும் வாய்ப்பினை அளித்ததற்கு நன்றி. கடந்த 10 ஆண்டுகளாக பேரவையில் அமைச்சராக பணியாற்றி வருகிறேன். 15ஆவது சட்டப்பேரவையின் கடைசிநாளில் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி"

- அமைச்சர் தங்கமணி பேச்சு

10:04 February 27

சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான 3ஆம் நாள்  விவாதம் நடைபெறுகிறது. இதில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலுரை வழங்குகிறார். 

Last Updated : Feb 27, 2021, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details