சென்னை பல்லாவரம் பச்சையம்மன் கோயில் தெருவில் வசிக்கும் செல்வகுமார்(48). இவர் கடந்த 1ஆம் தேதியன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து வீட்டிலிருந்த 2 செல்போன்கள் மற்றும் பீரோவில் இருந்த கவரிங் நகைகளை திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது திரிசூலத்தை சேர்ந்த பழைய குற்றவாளிகள் என கண்டுபிடித்தனர்.
அதனடிப்படையில் தனிப்படை காவல்துறை திரிசூலத்திற்கு சென்று கொள்ளையர்களான வெங்கடேஷ் ராஜா(எ) குண்டன்(22), தினேஷ்குமார் (எ) கடா தினேஷ்(21), பாலகணேஷ்(23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரும் தங்க நகைகள் என நினைத்து திருடி ஏமாந்ததாக தெரிவித்தனர். இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன.
இதில் வெங்கடேஷ் என்பவர் கடந்த 15 நாள்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்தவர் ஆவார்.
இதையும் படிங்க:ரயில் தண்டவாள கம்பியை திருடிய மூவர் கைது - போலீசார் விசாரணை