சென்னை அயனாவரம் பி.ஏ.கோயில் தெருவைச் சேர்ந்தவர், ரமேஷ். கடந்த 4 மாதங்களாக, அயனாவரம் என்எம்கே தெருவில் அன்னை ஏஜென்ஸி என்ற பெயரில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
கொள்ளையர்கள் கைவரிசை: ஷட்டரை உடைத்து சுடிதாரை அள்ளிச்சென்ற கும்பல்! - Thieves broke into Fancy store
சென்னை: அயனாவரத்தில் ஷட்டரை உடைத்து பேன்ஸி ஸ்டோரில் சுடிதாரை திருடிசென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளை
நேற்று(ஜனவரி 11) கடைக்குச் சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த பெண்கள் அணியும் சுடிதார் டாப்ஸ் 4, பாடி ஸ்பிரே 1 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் துறையினர் அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.