மதுரை: மேலூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அமினா பீவி (55), மகள், மருமகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் அமீனா பீவியிடம் கத்தியைக் காட்டி நகை பறிக்க முயன்றனர்.
இதில் அமினா பீவிக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் வரவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.