தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்கள் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது - பெண்கள் விடுதி

வேளச்சேரி அருகே உள்ள விடுதியில் பெண்கள் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

வேளச்சேரியில் பெண்கள் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது
வேளச்சேரியில் பெண்கள் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது

By

Published : Mar 26, 2023, 7:08 PM IST

சென்னை:வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் உள்ள விடுதியில் அதிகாலை பெண்கள் பாத்ரூமில் குளிப்பதை செல்போன் மூலமாக வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த விடுதியில் கடந்த 14ஆம் தேதி அந்த இளைஞர் வீடியோ எடுத்துள்ளார். இதைக்கண்ட பெண்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் அன்றே புகார் அளித்தனர். இதனடிப்படையில் போலீசார் சி.எஸ்.ஆர். மட்டும் பதிவு செய்து விட்டு புகாரை கிடப்பில் போட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த நபர் மீண்டும் 4 நாட்கள் கழித்து அதே போல் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்துள்ளார். இதைக்கண்டு பெண்கள் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பியோடினார். அதன்பின் மீண்டும் 18ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், வேளச்சேரி உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செல்போனில் வீடியோ எடுத்த அடையாளம் தெரியாத ஆசாமியை தேடி வந்தனர்.

இவரது இருசக்கர வாகனம் சென்ற இடங்களில் தொடர்ச்சியாக 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெசன்ட் நகரை சேர்ந்த துரைராஜ்(27) என்பதும், இவர் மீது 9 குற்ற வழக்குகள் இருப்பதும், 3 மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியில் வந்து திருடுவதற்கு நோட்டமிட அதிகாலை வரும் போது பாத்ரூமில் ஜன்னல் வெளியில் தெரியும் விடுதிகளாக குறிவைத்து பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்து பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதனை அடிக்கடி செய்து வந்ததுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான வீடியோ காட்சிகள் இருந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட நபரை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சென்னை கலாக்சேத்ரா கல்லூரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்

ABOUT THE AUTHOR

...view details