தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம்மில் கொள்ளையடித்த பணத்தில் ஐபோன் வாங்கிய கொள்ளையன்!

ஏடிஎம்-மில் கொள்ளையடித்த பணத்தில்,கொள்ளையன் ஐபோன் வாங்கியிருப்பது காவல் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Thief
ஏடிஎம்

By

Published : Jul 15, 2021, 6:56 AM IST

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் நடந்த எஸ்.பி.ஐ வங்கியின் கேஷ் டெபாசிட் மிஷின் கொள்ளை சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுமார் 1 கோடி ரூபாய் வரை ஹரியானா கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னை தனிப்படை போலீசார் ஹரியானாவிற்கு விரைந்து அமீர் அர்ஷ்,வீரேந்தர் ராவத்,நஜீம் உசைன்,சவுகத் அலி ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கும்பலிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொள்ளையடிப்பதற்காக செல்லக்கூடிய ஏடிஎம் மையங்களில், பணம் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஹரியானா கொள்ளையர்கள் செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியதும், காவல்துறையிடம் சிக்கினால் விசாரணையின் போது எப்படி பதிலளிக்க வேண்டும் போன்ற பயிற்சியையும் ஹரியானா கும்பல் மேற்கொண்டிருப்பது சவுகத் அலியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், கொள்ளையர்கள் தொடர்ந்து மழுப்பலாகவே பதிலளித்ததால் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றம் அடையாமல் நின்றது.

இந்நிலையில், ஏற்கனவே பீர்க்கன்கரணை காவல் துறையினர் விசாரணை செய்த நஜீம் ஹுசைனை, பெரியமேடு காவல் துறையினர் நேற்று முன்தினம்(ஜூலை.13) மூன்று நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதில், நஜீப் ஹுசைன் கொள்ளையடித்த பணத்தை கொண்டு செல்வதற்காக சொந்தமாக கார் ஒன்றை இ.எம்.ஐ மூலமாக வாங்கியுள்ளார். கொள்ளையடித்த பணத்தை ஹரியானாவிற்கு கொண்டு சென்று 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் வாங்கியதும், கார் வாங்கியதற்கான இ.எம்.ஐ தொகை கட்டியதும் தெரியவந்தது.

மேலும், பெரியமேடு எடி.எம்மில் சவுகத் அலி மற்றும் முகமது ஆரிப் 8 லட்சம் ரூபாயும்,நஜீம் ஹுசைன், சமையூதின் 8.40 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்துள்ளது.

‘நஜீம் உசைன் தொடர்ந்து மழுப்பலாகவே பதிலளிப்பதால், போலீஸ் காவல் முடிவதற்கு முன்னதாகவே பெரியமேடு காவல் துறையினர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மூன்றாம் அலை- டெல்டா அறிகுறிகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details