தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்பிளென்டர் மட்டுமே டார்கெட்.. 45 பைக்குகளுடன் சிக்கிய பலே திருடன்! - சென்னை

ஆவடி அருகே ரயில் நிலையங்களில் இருந்து தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த பலே திருடரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 45 இருச்சகர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் தொடர் பைக் திருட்டு
ரயில் நிலையத்தில் தொடர் பைக் திருட்டு

By

Published : Dec 17, 2022, 10:27 PM IST

சென்னை: ஆவடி அருகே திருமுல்லைவாயல், அண்ணனூர் ரயில் நிலையங்கள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் சமீப காலமாக திருடப்பட்டு வந்தன. இது குறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், உதவி ஆய்வாளர் பழனி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

மேலும், திருடு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட ரயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 16) காலை அண்ணனூர் ரயில் நிலையத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து வாகனத்தை பரிசோதிகையில், வாகனத்திற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரியவந்தது. அதன்பின்னர், போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் திருடியது குறித்து பல சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

திருட்டில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டம், கரிவேடு ஒச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி கணபதி (40) என்பது தெரியவந்துள்ளது. இவர் எப்பொழுதும் தலைக்கவசம் எடுத்துக்கொண்டு ரயில் ஏறி அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பட்டாபிராம் திருமுல்லைவாயல், அண்ணனூர், அம்பத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, எழும்பூர், நுங்கம்பாக்கம், ஓட்டேரி, மறைமலைநகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு வருவார். அவ்வாறு வருகையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை நோட்டமிட்டு தான் கொண்டு வந்த கள்ள சாவியை போட்டு வாகனங்களை திருடி வந்துள்ளார்.

குறிப்பாக ஸ்பிளென்டர் (SPLENDER) இருசக்கர வாகனத்தை திருடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இதன் பின்னர் திருடிய வாகனங்களை குறைந்த விலைக்கு விற்று கிடைக்கும் பணத்தினை வைத்து சந்தோஷமாக இருந்து வந்துள்ளார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 45 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, திருமுல்லைவாயல் போலீசார் கணபதியை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

45கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் வாகனம் தொலைந்தது குறித்து புகார் அழித்திருக்கும்பட்சத்தில் திருமுல்லைவாயல் காவல் நிலையம் வந்து தங்கள் வாகனம் இருப்பின் வழிமுறைகளை பின்பற்றி எடுத்து செல்லலாம் என திருமுல்லைவாயல் காவல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படங்க: போலீசுக்கு திருடன் ரெகுலர் கஸ்டமர்? கடுப்பான மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details