சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் தனிக்கட்சி தொடங்கிய அர்ஜுனமூர்த்தி மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். சென்னை தியாகராய நகரிலுள்ள கமலாலயத்தில் அண்ணாமலை அர்ஜூன மூர்த்திக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
"அர்ஜூனமூர்த்தி முன்பு பாஜகவில் பயணம் செய்து பல பொறுப்பு வகித்தவர், தொழில்நுட்பம் தெரிந்தவர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அரசியல் களம்சென்ற நிலையில் மீண்டும் வந்துவிட்டார். சித்தாந்தம், கொள்கையை ஏற்கும் யாரும் பாஜகவிற்கு வர அனுமதி உண்டு.
அர்ஜூன மூர்த்தி கட்சியிலிருந்து விலகி சென்றபோதும், இப்போது மீண்டும் பாஜகவில் இணையும் போதும் ஏன் என்று கேட்கவில்லை. அவரது கடின உழைப்பால் கட்சி உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மின் கட்டண உயர்வு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மின் கட்டண உயர்வுக்காக மக்கள் கருத்தை கேட்க முயற்சிப்பது நாடகம். மின் கட்டண விலையை குறைப்பதாக கூறி பெரிய தொழில் நிறுவனங்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் சார்பில் பேரம் பேசி வருகின்றனர். மக்கள் கருத்து கேட்பு என்ற கபட நாடகத்தை நிறுத்த வேண்டும். வசூல் வேட்டை நடத்ததான் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.
ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடை செய்ய ஆதரவாக இருப்போம்
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தொடர்ந்து கருத்து கேட்டு கொண்டே இருந்தால் அடுத்து தற்கொலை மூலம் சிந்தப்படும் ரத்தத்திற்கு ஆளும் கட்சி அமைச்சர்கள், முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். ஒரு வழியாக ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆவினில் தயாரிக்க அரசு முன்வந்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது. கர்பிணி தாய்மார்களுக்கு ஆவின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை
இலவசங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பது தான் தவறு. குடிமகனுக்கு அரசு செய்யும் கடமைகள் தவறு அல்ல. Public goods எனும் சுகாதாரம், கல்வி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது மக்களின் அடிப்படை உரிமை. வீடு, எரிவாயு, குடிநீர், வங்கி கணக்கு இவற்றை இலவசம் என்ற பெயரில் குறிப்பிடாமல் மத்திய அரசு வழங்குகிறது. இதை இலவசமாக கருதாமல் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாக பாஜக கருதுகிறது. ராஜஸ்தானில் தேர்தல் வருவதால் காங்கிரஸ் அரசு செல்போன், டேட்டா இலவசம் என்று கூறியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் இலவசம் எனும் பெயரில் பொருளாதார திட்டமிடல் இன்றி திமுக பலவற்றை அறிவித்து ஆட்சிக்கு வந்தது. விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரம் பாஜகவின் இலக்கு. தமிழகம் Learning of outcome ல் கல்வியில் பின்தங்கியுள்ளது. Lipstick அடித்தது போன்ற பெண்கள் இலவச பேருந்து முறையாக இயக்கப்படவில்லை.
பாஜகவின் தலைவர்கள் இலவசம் தொடர்பாக அதிகாரபூர்வ கருத்தை கூறவில்லை, இலவசங்கள் தரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோமா என்பது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர்கள்தான் கூற வேண்டும். மாநில தலைவராக நான் கருத்து கூற முடியாது. இலவசம் தருகிறது என்பதற்காக எந்த கட்சி மீதும் பழி போட்டுவிட முடியாது. அதை அந்த கட்சியினர் வேறு மாதிரி பார்க்கலாம். ஆனால் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு சட்டப்படி மாநிலங்களுக்கு என தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது கூட மாநிலங்களை கேட்டுதான் முதலமைச்சர் முடிவு செய்தார்.
இந்தியா சார்பில் பேசுவேன்