சென்னை: போயஸ் தோட்டத்திலுள்ள பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவரது 87ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவது சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும். காந்தி பிறந்த நாளில் பேரணி நடத்தினால், அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது.
"தமிழகத்தில் பலவீனமான ஆட்சி நடப்பதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்" - திருமாவளவன் தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி நடப்பதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தியா முழுவதுமே காவல்துறை முக்கிய பணிகளில் ஆர்.எஸ்.எஸ் நபர்களை முன்னிலைப்படுத்த பாஜக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் முன்பை விட தன்னுடைய நடவடிக்கையை அதிகப்படுத்த தமிழ்நாட்டில் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் அது வெற்றி பெறாது" என்றார்.
இதையும் படிங்க: ‘ராகுல் காந்தி காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்’ - எல். முருகன்