சென்னை:மேற்கு மாம்பலத்தில் கோயில் நிர்வாகியாக இருக்கக்கூடிய கிருஷ்ணபிரசாத் என்பவர் நேற்று (ஜூன் 23) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் நடிகை மதுவந்தி பத்ம சேஷாத்ரி பள்ளியில் சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி, பெற்றோர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாகப் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்புத் தெரிவித்து மதுவந்தி ஆன்லைன் மூலமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கிருஷ்ணபிரசாத் தனது கலைக்குழுவில் இடம்பெற்றிருந்தார் எனவும்; அப்போது சமுதாயத்தில் பின்தங்கிய இரு குழந்தைகளுக்கு பத்ம சேஷாத்ரி பள்ளியில் சீட்டு வாங்கித்தருமாறு தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் - காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுவந்தி புகார்! - Madhuvanthi
என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக நடிகை மதுவந்தி புகார் அளித்துள்ளார்.
அவர்களுக்கு கருணை அடிப்படையில் பள்ளியில் இடம்பெற்று கொடுத்ததாகவும், ஆனால் தனது பெயரைப் பயன்படுத்தி கிருஷ்ணபிரசாத் பெற்றோர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிருஷ்ணபிரசாத்திடம் ஒரு ரூபாய் கூட இதுவரை வாங்கவில்லை எனவும்; போலியான ஆவணங்களை கிருஷ்ணபிரசாத் தயார் செய்து, தன் மீது வீண் பழி போடுவதாகவும் மதுவந்தி தெரிவித்துள்ளார். இதனால் உடனடியாக கிருஷ்ணபிரசாத் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சி இங்கேயே படுப்போம்..' - அதகளம் செய்த போதை ஆசாமிகள்!