சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை கால தாமதமாக தொடங்கியது, இதனால் கல்லூரிகள் வழக்கம் போல் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்படவில்லை. மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு நவம்பர் 18 ஆம் தேதி முதலே முதலாம் ஆண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதனால் போதிய பாட வேலைகள் இல்லாமல், மாணவர்களுக்குரிய பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படாமல் சூழல் உள்ளது. இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2022-23 நடப்பு கல்வி ஆண்டுக்குரிய பாடத்திட்டத்தை மே 1 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.