தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து இடங்களிலும் மற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை - disabled people request

இந்தியாவில் பொதுத்துறை கட்டங்கள், பேருந்து, ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை மாற்று திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் இணையத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

அனைத்து இடங்களிலும் மற்றுத்திறனாளிகளுக்காண வசதிகள் வேண்டும்;  மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
அனைத்து இடங்களிலும் மற்றுத்திறனாளிகளுக்காண வசதிகள் வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

By

Published : Jun 17, 2022, 7:29 AM IST

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள பொது துறையால் கையாளப்படும் கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் சென்று வரக்கூடிய அளவிற்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என, கடந்த ஐந்து ஆண்டிற்கு முன்பு சட்டம் இயற்றப்பட்டது.

அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு ் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் இணையத்தின் சார்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு வசதிகள் உள்ளதாக என ஆய்வு செய்யப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், சென்ட்ரல் ஸ்கொயர் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு, பயணம் மேற்கொள்ள எந்த இடமும் அமையவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர். இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும் போது, சென்னை ஸ்கொயர் 400 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் மாற்றுத்திறனாளிக்கான வசதிகள் என்பது பூஜ்யமே என்றும், 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மாற்றுத்திறனாளிக்கான உரிமைகள் சட்டத்தின்படி அவர்களின் வசதி என்பது பூஜ்யமாக உள்ளது என 25க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பதாகைகள் ஏந்தி வலம் வந்தனர்.

வசதிகள் இல்லை: இதுகுறித்து நம்மிடம் பேசிய மாற்றுத்திறனாளியான ஸ்மிதி, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பொது துறையால் கையாளப்படும் கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் சென்று வரக்கூடிய அளவிற்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டிற்கு முன்பு சட்டம் இயற்றப்பட்டது.


மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களும் மாற்றுத்திறனாளி ஏற்றவாறு அமைய வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இன்றளவும் எதுவும் மாறாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தோடு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தள வசதி இருக்கிறது, ஆனால் அனைத்துமே பெயரளவில் செயல்படுவது போல இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் தரும் வகையில் எதுவும் இல்லை, என குற்றம்சாட்டினார்.

அனைத்து இடங்களிலும் மற்றுத்திறனாளிகளுக்காண வசதிகள் வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

மற்றவரின் உதவி தேவைப்படாது: இதுகுறித்து மாற்றுத்திறனாளியான சதீஷ் குமார் கூறுகையில், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள், உள்ளிட்டவை மாற்று திறனாளிகள் சென்று வரக்கூடிய அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால், மாற்றுத்திறனாளிகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் தான் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். .

மாற்றுத்திறனாளிகள் சென்று வரக்கூடிய பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்களில் மாற்று திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வசதிகள் இல்லை. அனைத்து கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி, கழிப்பிட வசதி, இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் பிறரை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை, அவர்களுடைய வாழ்க்கையை அடுத்த நிலைக்கு அது உயர்த்தும். இந்த மாற்று திறனாளிகளுக்கான சட்டத்தின் படி அனைத்து மாற்றுத்திறனாளிக்கான கட்டமைப்பு மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கவனம் செலுத்துமா அரசு: மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கும் மாற்றுத்திறனாளிக்கு வழங்கி வரும் சூழ்நிலையில், மாற்று திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் போக்குவரத்து மற்றும் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அடிப்படை கட்டமைப்புகளை மாற்றி அமைப்பதன் மூலம் அவர்கள் அடைய வேண்டிய அடுத்த நிலையை அடைவார்கள் என்பதே நிதர்சமான உண்மை.

இதையும் படிங்க:திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலையா?.. ஹெச்.ராஜா கேள்வி

ABOUT THE AUTHOR

...view details