சென்னை:காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இந்திய அரசியல் அமைப்பு பாதுகாப்பு வேண்டி தமிழக காங்கிரஸ் கட்சியின் 8 அமைப்பு இணைந்து தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 75 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம், திக் விஜய் சிங், சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் குண்டு ராவ், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், குமரி ஆனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
தொடக்க விழாவின்போது முதலில் மேடையில் பேசிய எம்.பி. திருநாவுக்கரசர், "அரசியல் சட்டத்தை காக்க வேண்டும் என்ற பயணம் இங்கு தொடங்கி உள்ளது. அதே போல் ராகுல் காந்தி பயணம் கூட தமிழ்நாட்டில் தொடங்கியது, எனவே இது தமிழ்நாட்டிற்கு பெருமை. இந்தியாவில் பல கட்சி இருக்கலாம் ஆனால் பிஜேபி க்கு மாற்று காங்கிரஸ் தான். மோடி க்கு மாற்று ராகுல் காந்தி தான். அதுமட்டுமின்றி மோடிக்கு மாற்று ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர்.