தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்! - சென்னையில் மழைக்கு வாய்ப்பு, புவியரசன் தகவல்

சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

rain

By

Published : Oct 26, 2019, 3:05 PM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது நான்கு நாள்களில் மேற்கு, வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக வரும் நாள்களில் தென் தமிழ்நாடு, புதுவை, கடலோர மாவட்டங்களிலும் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழையின் அளவாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும். இதனால் மீனவர்கள் தென்மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தென் தமிழ்நாடு கடற்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: க்யார் புயலால் கர்நாடகாவில் வீடுகள், மரங்கள் சேதம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details