தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்றதில் விதி மீறல் இல்லை!' - nayanthara vignesh shivan

நடிகை நயன்தாரா வாடகைத்தாய் முறையில் குழந்தைப்பெற்றதில் விதிமீறல் இல்லை, ஆவணங்களை சரிவர பராமரிக்காத கருத்தரிப்பு மையம் மீது விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதி மீறல் இல்லை - மா.சுப்பிரமணியன்
நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதி மீறல் இல்லை - மா.சுப்பிரமணியன்

By

Published : Oct 27, 2022, 4:12 PM IST

சென்னை:தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ’நட்புடன் உங்களோடு மனநல சேவை’ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பிரபல நடிகை நயன்தாரா வாடகைத் தாய்முறையில் குழந்தைப் பெற்றதில் எந்த விதிமுறைகளும் இல்லை. மேலும் மத்திய அரசின் ஐசிஎம்ஆர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பிறப்பதற்கான சட்ட விதிகளின் அடிப்படையிலேயே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, குழந்தைகள் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட கருத்தரிப்பு சிகிச்சை மையம் முறையான ஆவணங்களை மருத்துவக்குழு மேற்கொண்ட விசாரணையின்போது சமர்ப்பிக்கவில்லை. முறையான தகவல் அளிக்காத காரணத்தால் மேற்கண்ட மருத்துவ மையத்திற்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாடகை முறையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், புதிய சட்டத்தின்படி வாடகைத்தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமே தான் பெற முடியும். இதனால் இதில் முன்பு போல எளிதாக வாடகைத்தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் பல கட்டுப்பாடுகள், இந்தப் புதிய சட்டத்தில் இருக்கின்றன.

அமைந்தகரையில் செயல்பட்டு வரும் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அத்தகைய கருத்தரிப்பு மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எந்த மருத்துவமனை விதியை மீறி இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டி

முன்னதாகப் பேசிய அவர், ”14416 என்ற இலவச எண் தொலைபேசி மூலம் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் தொடர்புகொண்டு தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.

இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகள் துறையுடன் இணைந்து மக்களது பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்படும். 104, 108 போன்ற இலவச எண் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வாடகைத் தாய் விவகாரம்; தனியார் கருத்தரித்தல் மருத்துவமனைக்கு நோட்டிஸ்...!

ABOUT THE AUTHOR

...view details