சென்னை: உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் கடினமான சம கோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்து மேற்கொண்ட பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 415 மாணவர்கள் சுமார் ஒரு மணிநேரம் சமகோண ஆசனத்தில் அமர்ந்து சாதனை நடத்த தொடங்கினார்கள்.
மேலும் பி.கே.முனுசாமி என்பவர் களிமண்ணால் 30 நொடிகளில் சிலை செய்து உலக சாதனை நிகழ்த்தினார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். கோல்டன் புக் ஆப் உலக சாதனையில் இந்த சாதனை இடம் பெற்றது. நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக 27 நிமிடங்கள் சம கோண ஆசனம் செய்து 1 மணி 27 நிமிடங்கள் ஆசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.
அதிமுக பாஜக இடையே ஒற்றுமை இல்லை இதில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி சுரேஷ்குமார் தமிழக பள்ளிகளில் யோகா பயிற்சியை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கரோனா தொற்று கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி செயல்பட்டு வருகிறோம். மேலும் தமிழகத்தில் கூட்டணி கட்சியாக உள்ள அதிமுக பாஜக கட்சிகள் ஒருவரை ஒருவர் கண்டித்து வருவதோடு மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர் . அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என்றார்.
இதையும் படிங்க: இலங்கையிலிருந்து ரூ.47.25 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்; 2 பெண்கள் கைது