திமுகவில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவும் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
திமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை - டி.ஆர்.பாலு - there is no issue in DMK
சென்னை: திமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
திமுகவில் எந்த குழப்பமும் கிடையாது -டி.ஆர். பாலு விளக்கம்..!
இந்நிலையில், டெல்லியிலிருந்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர். பாலு சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவரிடம் திமுக பொருளாளர் பதவிக்கு நீங்கள் போட்டியிட போவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறிய பின், திமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை என கூறிவிட்டு டி.ஆர் பாலு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க...செப்., 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி!