சென்னை கிண்டியிலுள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், ஏடிஜிபி அபய் குமார் தலைமையில் அனைத்து சிலைத் தடுப்புப் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய சிலைத் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு, எஸ்பி ராஜேஸ்வரி, அனைத்து மாவட்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஐஜி அன்பு, “தமிழ்நாடு முழுவதும் சிலைக்கடத்தல் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை எவ்வாறு விரைவாக முடிப்பது, மேலும் அலுவலர்கள் முனைப்பாக செயல்படுவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.