அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மோசடி நடைபெறுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்து அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் கூறியதாவது, "குரூப் 1 நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுபவர்களை தேர்வாணைய குழு உறுப்பினர் ஒருவர், மூத்த ஐஏஎஸ் அலுவலர் ஒருவர், ஐபிஎஸ் அலுவலர் ஒருவர், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் கொண்ட குழுவினரே நேர்காணல் செய்வார்கள்.
மேலும், நேர்காணல் செய்யும் குழுவினர் தேர்வர்களின் திறன் அடிப்படையிலேயே மதிப்பெண்களை வழங்குவர். மதிப்பெண்களைத் தேர்வுக் குழுவினர் ஒருமித்த கருத்தோடு வழங்குவார்கள். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களையும் கணினியில் மட்டுமே பதிவு செய்வார்கள். பென்சில் கொண்டு மதிப்பெண்களைப் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை" என்றார்.