தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்! - பள்ளிக்கல்வித்துறை

TN school quarterly holidays: பள்ளிக்கல்வித்துறையால் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 9:28 PM IST

சென்னை:பள்ளிக்கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரையும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரையும் காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2ஆம் பருவத்திற்கான வகுப்புகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அக்டோபர் 3 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் அக்டோபர் 9ஆம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள கடிதத்தில், "பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆண்டு நாள்காட்டியில், 2 ஆம் பருவ பள்ளிகள் திறப்பு அக்டோபர் 3 ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்படும்.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 2 ஆம் பருவத்திற்கான பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஒன்றியம் தோறும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில் 2 கட்டங்களாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ள வேண்டும். கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும். பயிற்சிக்குச் செல்லும் ஆசிரியர்கள் தவிர, பிற ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைப்புரிய வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு 2 பருவத் தேர்வுகள் நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் வழக்கம்போல் செயல்படும். அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக.. அண்ணாமலை ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details