சென்னை:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 2670 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட வார்டுகளாக பெருங்குடி மண்டலத்தில் உள்ள 190ஆவது வார்டு, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள 192ஆவது வார்டு ஆகியவை உள்ளன.
190, 192ஆவது வார்டுகளில் தலா 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்த வேட்பாளர்களைக் கொண்ட வார்டுகள் எனப் பார்க்கும்போது மணலி மண்டலத்தில் உள்ள 17 வார்டு, மாதவரம் மண்டலத்தில் உள்ள 28ஆவது, 31ஆவது வார்டுகள் உள்ளன. இங்கு தலா 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
மேலும் 16 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் இரண்டு இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
இதையும் படிங்க:ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவினை சோதனை செய்ய தேர்வு - பள்ளிக்கல்வித்துறை