சென்னை: அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுகவின் கொடியேற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும் என்று பலமுறை கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக கடிதத்திற்கு மதிப்பளித்து எங்களுக்கு மரியாதையும், உரிமையும் நிலை நாட்ட வேண்டியதுதான் சபாநாயகரின் கடமை. ஓபிஎஸ்ஸிடம் 4 பேர் மட்டும் தான் இருக்கின்றனர். இபிஎஸ் தரப்பில் தான் அதிக அளவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கின்றனர். இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று ஊடகங்கள் போடாதீர்கள்.