கரோனா வைரஸ் பெருந்தோற்று சென்னையில் அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மாநகராட்சி முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களை பரிசோதனையும் செய்து வருகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 8 ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை மொத்தம் 13,212 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. நேற்று மட்டும் 500 மருத்துவ முகாம்கள் 15 மண்டலங்களிலும் நடைபெற்றுள்ளது. அதில் 29 ஆயிரத்து 826 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி இருந்த 1,895 நபர்கள் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.