சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தனது தந்தையுமான ஓ. பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வருகை தந்தார். நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பொதுக்குழுவில் பங்கு பெற தனக்கும் அழைப்பு வந்துள்ளதாகவும் நிச்சயம் பொதுக்குழுவில் பங்கேற்பேன்.
எனது நாடாளுமன்றத் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை வைக்கவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அவர்களது தொகுதி கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.