சென்னைதலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA Committee) முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மகன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்தரநாத் முதலமைச்சரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில், "பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத்துறைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் பெரியகுளம் நகரில் ஏப்ரல் 10, 1916 - ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் பென்லாண்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட, 106 ஆண்டுகள் செயல்பட்டு வரும் சிறப்பு வாய்ந்த அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் தற்போதைய நிலை பற்றி தங்களின் பணிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
முதலமைச்சரைச் சந்தித்து பேசிய ஓபிஎஸ் மகன் ஒரு சில மருத்துவ சேவை குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் நான் கடந்த மே 9ஆம் தேதி மருத்துவமனையை நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது, அங்கிருந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் மருத்துவமனைக்கான கூடுதல் தேவைகள் பற்றி கேட்டறிந்தேன்.
மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடனடி தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை பற்றிய விவரங்களை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு பின் குறிப்பிட்டுள்ள அடிப்படை தேவைகளை விரைவாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பெற ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார். இதே மனுவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும் ப.ரவீந்திரநாத் வழங்கினார்.
இதையும் படிங்க: தன்னைக் கட்டி அணைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் - முதலமைச்சரை சந்தித்த பிறகு பேரறிவாளன் நெகிழ்ச்சி