தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்! - மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டலில்

சென்னை: தேனாம்பேட்டையில் சாலையோரம் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் காவலர்களைக் கண்டதும் தப்பியோடினர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்

By

Published : Feb 22, 2021, 11:29 AM IST

சென்னை தேனாம்பேட்டை ஜெமினி மேம்பாலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நீண்ட காலமாகத் தங்கிவந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு, இளைஞர்கள் இருவர், அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர்.

இது குறித்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது, ரோந்துப் பணியிலிருந்த காவல் துறையினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்றனர். காவல் துறையினர் வருவதைப் பார்த்ததும், இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

பின் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, காவல் துறையினர் பத்திரமாக மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்தனர். பின் அவ்விடத்திலிருந்து தப்பியோடிய இளைஞர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:குழந்தையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 22 பேர் சிக்கினர்!

ABOUT THE AUTHOR

...view details