தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகைப்பட்டறையில் திருட்டு: வடமாநில ஊழியருக்கு வலைவீச்சு! - Theft of 400 grams in a jewelry store

சென்னை: நகைப்பட்டறையில் சுமார் 19 லட்ச ரூபாய் மதிப்புள்ள 400 கிராம் தங்க நகையை திருடிய வடமாநில ஊழியரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Gold theft  நகைப்பட்டறையில் 400 கிராம் திருட்டு  சென்னை நகை திருட்டு  சென்னை குற்றச் செய்திகள்  தமிழ்நாடு குற்றச் செய்திகள்  Chennai Gold Theft  Chennai Crime News  Tamilnadu Crime News'  Theft of 400 grams in a jewelry store  Theft of 400 grams at a jewelery shop in Chennai
Chennai Gold Theft

By

Published : Dec 19, 2020, 11:38 AM IST

சென்னை தி. நகர் கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் மகாவீர் ஜெயின் (53). இவர் அதே பகுதியில் தங்க நகை செய்யும், நகைபட்டறையை நடத்திவருகிறார். இவரது பட்டறையில் கடந்த ஓராண்டாகப் பணிபுரிந்துவருபவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பரான் சந்திரன் (30).

நகை செய்ய தங்கம் வழங்கல்

இந்நிலையில், நேற்று முந்தினம் (டிச. 17) மகாவீர் ஜெயின் சுமார் 19 லட்ச ரூபாய் மதிபப்புள்ள 400 கிராம் தங்கத்தை நகை செய்வதற்காக பரான் சந்திரனிடம் வழங்கியுள்ளார்.

பின்னர் நேற்று காலை (டிச. 18) பட்டறையில் நகையை வந்து பார்க்கும்போது 400 கிராம் தங்கம் காணாமல்போயுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகாவீர், பரான் எண்ணுக்குத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, பரான் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

வழக்குப்பதிவு

இதனால் அதிர்ச்சியடைந்த மகாவீர் இது குறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அங்கு பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து தலைமறைவாக உள்ள பரான் சந்திரனை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:சுங்கத்துறை அலுவலகத்தில் கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details