திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் வில்லிவாக்கம் பாட்டை ரோட்டில் எம்.எம் என்ற மொபைல் ஷாப் நடத்தி வருகிறார். அவரது கடை அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் மீரான் என்பவர் இன்று அதிகாலை நோன்பு நோற்பதற்காக தன் கடை அருகில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுக்க வந்திருக்கிறார். அப்போது முஸ்தபாவின் மொபைல் கடைக்குள் சத்தம் கேட்டிருக்கிறது. யார் அது என மீரான் குரல் கொடுத்திருக்கிறார். உள்ளே இருந்து பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 நபர்கள் மீரானை தாக்க முயற்சித்துள்ளனர். தப்பி ஓடிய மீரான், அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்துள்ளார்.
பயங்கர ஆயுதங்களுடன் வந்து சிசிடிவி கேமராக்களை உடைத்துக் கொள்ளை? - சிசிடிவி கேமரா
சென்னை: பயங்கர ஆயுதங்களுடன் வந்து சிசிடிவி கேமராக்களை உடைத்து மொபைல் ஷாப்பில் கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அந்த அடையாளம் தெரியாத நபர்கள், உடனடியாக பைக்கில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து முஸ்தபாவுக்கு தகவல் அளித்தார் மீரான். பதறி அடித்து ஓடி வந்த முஸ்தபா, கடைக்குள் சென்று பார்த்தபோது 4 சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு, ரூ.6 லட்சம் மதிப்பிலான மொபைல்கள், ரூ.97 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஐசிஎப் காவல் நிலையத்தில் முகமது முஸ்தபா புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.