தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் திருமணம் செய்தவர்கள் மீது திருட்டு வழக்கு - காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!

காதல் ஜோடி வீட்டிலிருந்து நகை, பணத்தை திருடிச் சென்றதாக பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

காதல் திருமணம் செய்தவர்கள் மீது திருட்டு வழக்கு - காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!
காதல் திருமணம் செய்தவர்கள் மீது திருட்டு வழக்கு - காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை!

By

Published : Nov 29, 2022, 6:33 PM IST

சென்னை: ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந் குருசாமி, அதே பகுதியைச் சேர்ந்த சுபா என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி பெரியார் திடலில் வைத்து இவர்களின் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. 15ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், 17ம் தேதி பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் தனது மகள் வீட்டில் இருந்து 65 சவரன் தங்க நகை மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். ராஜமங்கலம் காவல் நிலையத்தில் காணாமல் போனதற்கு மட்டும் வழக்கு பதிவு செய்து சுபாவை தேடி வந்தனர் இந்த நிலையில் சுபா மற்றும் குருசாமி இருவரும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி தாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டும் தங்களை எங்கள் குடும்பத்தினர் தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ராஜமங்கலம் போலீசார் சுபாவின் பெற்றோரை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தாங்கள் வீட்டிலிருந்து 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 12 சவரன் நகையை மட்டுமே எடுத்து வந்ததாக சுபா கூறியுள்ளார். இப்போது வழக்கில் புதிய மாற்றமாக, தனக்கு மகள் வேண்டாம் ஆனால், 65 சவரன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கத்தை மீட்டுக் கொடுத்தால் போதும் என பேசியுள்ளார்.

இதன்பேரில் அவரிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலிசார் காதல் ஜோடிகள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து, காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குருசாமியின் தந்தை சாதி மறுப்பு திருமணத்தால் தன் மகன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை முறையாக விசாரிக்காமல் தவறான கைது நடவடிக்கை மேற்கொண்டதாக கூறி ராஜமங்கலம் காவல் ஆய்வாளர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர் இது தொடர்பாக அவரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:தெருநாய்களால் துண்டாக்கப்பட்ட குழந்தையின் உடல்

ABOUT THE AUTHOR

...view details