தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் வாட்ச், லேப்டாப் தருவதாகக்கூறி நூதனத்திருட்டு! - போலீஸார் விசாரணை

இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் வாட்ச், லேப்டாப் தருவதாகக்கூறி கல்லூரி மாணவன் உட்பட இருவரிடம் ரூ.1.5 லட்சம் நூதனத் திருட்டு நடந்துள்ளது.

நூதன திருட்டு
நூதன திருட்டு

By

Published : Oct 6, 2022, 8:34 PM IST

சென்னை: வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியைச்சேர்ந்தவர் சதீஷ்குமார்(19). இவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ மூன்றாம் ஆண்டு பிடித்து வருகின்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது ஸ்டேட்டஸில் குறைந்த விலையில், லேப்டாப் விற்பதாக கூறியதை அடுத்து, சதீஷ் கியூ ஆர் கோடு மூலம் இரண்டு தவணைகளாக 43,550 ரூபாய் செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்திய உடனே அந்த அடையாளம் தெரியாத நபர் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டை பிளாக் செய்து விட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் உடனே இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல வியாசர்பாடியைச்சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பிரசாந்த் (29) என்பவரிடம், இதேபோல் குறைந்த விலையில் பிரபல நிறுவன வாட்ச் தருவதாக ஸ்டேட்டஸ் அனுப்பியுள்ளனர்.

இதனை நம்பி பிரசாந்த் இரண்டு தவணையாக 75 ஆயிரம் ரூபாய் செலுத்திய உடனே அந்த கும்பல் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டை பிளாக் செய்தனர். இதுகுறித்து பிரசாந்த் அளித்தப்புகாரின்பேரில், வியாசர்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரிய வாலிபர்; தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details