சென்னைவடபழனி எல்.வி பிரசாத் சாலையில் வசித்து வருபவர் தேவ் ஆனந்த்(29). இவர் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திடம் உதவியாளராக இருந்து வருகிறார். தேவ் ஆனந்த் கடந்த 2ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் தர்மபுரி மாவட்டத்திற்குச்சென்று விட்டு நேற்று (மார்ச்.7) வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் உதவியாளர் வீட்டில் திருட்டு.. - அமைச்சர் எம்ஆர்கே உதவியாளர் வீட்டில் திருட்டு .போலீசார் விசாரணை
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் உதவியாளர் வீட்டில் நடைபெற்ற திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவ் ஆனந்த் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோ மற்றும் மேஜைகள் உடைக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த 500கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இதுதொடர்பான அவர் காவல் துறை கட்டுபாட்டு அறைக்கு அவர் தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு சென்ற விருகம்பாக்கம் காவல்துறையினர் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேசிய பங்குச் சந்தை முறைகேடு - முன்னாள் தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் கைது
TAGGED:
Minsiter