சென்னை:நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “பீஸ்ட்” படத்தின் ட்ரைலர் நேற்று (ஏப்.02) வெளியானது. ட்ரைலர் வெளியீட்டை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களுக்கு இலவசமாக ட்ரைலர் போடப்பட்டன.
இதேபோல், திருநெல்வேலியிலுள்ள ஒரு திரையரங்கில் ட்ரைலர் போடப்பட்டது. அப்போது ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்கில் இருந்த கண்ணாடிகள், நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், திரையரங்கிற்கு ஏராளமான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியீட்டு உள்ள ஆடியோ பதிவில், ரசிகர்களை திருப்திப்படுத்தவும் தங்களின் திரையரங்குகளின் பெருமைக்காகவும் இதுபோன்ற இலவச நிகழ்ச்சிகள் திரையரங்கு உரிமையாளர் தரப்பில் ஏற்படுத்தப்படுகின்றன.