தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாளை முதல் புதிய கட்டுப்பாடுளை அரசு அறிவித்துள்ளது.
அதில் திரையரங்குகளில் இரவு நேர காட்சிகளை ரத்து செய்ய வேண்டும், 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி ஆகிய கட்டுப்பாடுகள் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.