தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் ரகளை! யூடியூபரின் ரகளையால் முகம் சுளித்த மக்கள்! - அசார் கெட்டவன்

திருச்சியில் பொது மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் 100 இருசக்கர வாகனங்களில் இளைஞர் உலா சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

யூடியூபரின் ரகளையால் பீதியில் உறைந்த திருச்சி மக்கள்
யூடியூபரின் ரகளையால் பீதியில் உறைந்த திருச்சி மக்கள்

By

Published : May 15, 2023, 10:16 PM IST

யூடியூபரின் ரகளையால் பீதியில் உறைந்த திருச்சி மக்கள்

திருச்சி:சமீப காலங்களில் இணையதளம் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பலரும் யூடியூப் லைவ், முகநூல் நேரலை என சமையல், நடனம், டிராவல், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பது வரை எல்லாவற்றையும் காணொளி காட்சிகளாக பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பதோடு கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர். Travel vlogger டிடிஎஃப் வாசன் இதற்கு முன் உதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் திருச்சியை பூர்வீகமாக கொண்ட அசார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அசாத்தியமாக ஒட்டி சமூக வலைத்தளங்களில் லைக்குகளை அள்ளி வருகிறார். இவர் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1000 RR வகை இருசக்கர வாகனத்தை வைத்து உள்ளார். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சப்ஸ்கிரைப்பர்கள் வைத்திரு அசாரின் அலப்பறை வீடியோக்களால் தற்போது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சமாக உயர்ந்து உள்ளது.

ஒரு பிரபல நடிகருக்கு கூட சேராத கூட்டம் இந்த யூடியூபர் அசாருக்கு கூடுவதாக கூறப்படுகிறது. தனது பெயரில் அதாவது அசார் கெட்டவன் என்ற பெயரிலேயே இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். தனது விலை உயர்ந்த பைக்கை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராக சுற்றி யாருப்பா நீ? எங்க போற? என பலரும் பிரமிப்புடன் பார்க்கும் வகையில், தனக்கு பின்னே நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க செய்து தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

அந்த வகையில், திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே ஸ்டூடண்ட்ஸ் ரோடு எனப்படும் நீதிமன்ற சாலையில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் உறுமல்களுடன் கூச்சலுக்கு இடையே தனது பயணத்தை தொடர்ந்தார். இதனால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர் பின்னே வந்த பலரும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் காலெடுத்து வைக்கும் இளைஞர்கள் தான். இரு தினங்களுக்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் "இன்று மாலை 4.30 மணிக்கு திருச்சியில் சந்திப்போம்" என்று தனது சப்ஸ்கிரைபர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அதன்படி இன்று (மே. 15) மாலை தனது அலப்பறை ஆட்டத்தை அரங்கேற்றினார்.

இது குறித்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. பிரபல youtuber அகஸ்தியா சௌஹான் தனது சேனலை Promote செய்ய தனது பைக்கில் 300 கிலோமீட்டர் வேகத்தை தொடும்போது சென்ட்ரல் மீடியனில் மோதி உயிரிழந்தார். 22 வயதில் ஒரு த்ரிலுக்காக சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் தனது உயிரை பறி கொடுத்தார். 100ல் போனால் 108ல் போக நேரிடும் என்பதை மறந்து அசுர வேகத்தை தொட்ட அகஸ்திய சௌஹானின் மரணம் ஒரு எச்சரிக்கை படிப்பினை என்பதை அசார் நினைவில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:"தமிழகத்தில் இதுவரை இல்லாத துர்பாக்கியம்" - ஆளுநரை விளாசிய வைகோ!

ABOUT THE AUTHOR

...view details