தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருமானம் இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது - பூந்தமல்லி கொள்ளைச் சம்பவம்

சென்னை: ஊரடங்கு நேரத்தில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வீடுகளில் கௌபாரைப் (COWBAR)பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

கொள்ளை
கொள்ளை

By

Published : Sep 5, 2020, 8:52 AM IST

சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, மேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜா. இவரது வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர் தொலைக்காட்சி, கண்காணிப்புப் படக்கருவி, மடிக்கணினி ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்புப் படக்கருவி காட்சிகளைக் கொண்டு நசரத்பேட்டை காவல் துறையினர் கொள்ளையனைத் தேடிவந்தனர்.

வாக்குமூலம்

இந்நிலையில் பூந்தமல்லி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அப்பு (என்ற) அப்பன் ராஜ் (29) என்பவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஊரடங்கு நேரத்தில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வரும் வழியில் வீட்டிற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிக்கொண்டு பின்னர் சிவராஜாவின் வீட்டின் பூட்டை, இரும்புக் கம்பிகளை வளைக்கும் கவ்பாரையால் உடைத்து கொள்ளையடித்ததை அப்பு ஒப்புக்கொண்டார்.

கவ்பாரைப் பயன்படுத்தியது எதற்கு?

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும்போது யாராவது தடுக்க முயன்றால் அவர்களை இரும்புக் கம்பியால் தாக்கவும் உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இவரிடமிருந்து இருசக்கர வாகனம், தொலைக்காட்சி, கண்காணிப்புப் படக்கருவி, மடிக்கணினி, கவ்பார் ஆகியவற்றை நசரத்பேட்டை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

மேலும் இவர் ஏற்கனவே மாங்காட்டில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details