தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி வெளியிட பணிகள் தீவிரம்! - சென்னை மாவட்ட செய்தி

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி வெளியிட அரசுத் தேர்வுத்துறை பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 2, 2023, 7:23 PM IST

Updated : May 3, 2023, 9:00 AM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதினர். அதே போல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 7 லட்சத்து 87 ஆயிரத்து 700 மாணவர்களும் எழுதினர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்காக மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 10ஆம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மை தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியைத் துவக்கினர்.

அதனைத்தொடர்ந்து 11ஆம் தேதி முதல் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு விடைத்தாள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ஆம் தேதி துவங்கி நாளையுடன் முழுவதும் முடிக்கப்படுகிறது. எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்காெண்டு வருகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 8ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்குகிறது - அய்யாக்கண்ணு

Last Updated : May 3, 2023, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details