தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா.. அக்னி குண்டத்தில் விழுந்த பெண்ணால் பரபரப்பு! - அக்ணி குண்டத்தில் விழுந்த பெண்

சென்னை ராமாபுரத்தில் நடந்த கோயில் தீ மிதி விழாவில் அக்னி குண்டத்தில் கால் இடறி தவறி விழுந்த பெண்ணை பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக மீட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 10, 2023, 3:34 PM IST

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா

சென்னை: ராமாபுத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராமாபுரம், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி, விரதம் இருந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

அப்போது அக்னி குண்டத்தில் இறங்கும்போது பெண் பக்தர் ஒருவர் கால் இடறி அக்னி குண்டத்தில் விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண்ணை நொடிப்பொழுதில் துரிதமாக செயல்பட்டு தீயில் இருந்து தூக்கி காப்பாற்றினர்.

இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெண் பக்தர் ஒருவர் கால் இடறி அக்னி குண்டத்தில் தவறி விழுந்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தீயில் விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்பு வீரர்களின் செயல் காண்பவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம்

ABOUT THE AUTHOR

...view details