சென்னை தாம்பரம் ரயில் நிலையம் 8ஆவது பிளாட்பாரத்தில் ஹமீதா பானு என்பவர் ரயில் ஏற முயன்றுள்ளார். திடீரென எதிர்பாராத விதமாக அவர் கீழே தவறி விழுந்தார்.
ரயில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்; காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு! - சென்னை அண்மைச் செய்திகள்
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை ஓடிச் சென்று மீட்ட ரயில்வே காவலரை பலரும் பாராட்டினர்.
ரயில்வே காவல்துறையினருக்கு பாராட்டு
அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே காவலர் ஜோஸ், உடனடியாக ஓடிச் சென்று அவரை மீட்டு ஆசுவாசப்படுத்தி அமரச்செய்தார். இதே போல் 90 வயது மூதாட்டி ஒருவர் ரயில் ஏற நடந்து செல்ல முடியாமல் அவதியுற்றார். அவரை ரயில்வே காவல் துறையினர் தூக்கிச் சென்று ரயில் ஏற்றி விட்டனர். இந்தச் சம்பவங்களை நேரில் கண்ட பொதுமக்கள் ரயில்வே காவல் துறையினரை வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க:'நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளை என் தந்தை' - ஆர்பி உதயகுமாரின் மகள்