இது குறித்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன், தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மார்ச் 31ஆம் தேதி வரை ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர், விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் மூன்றாயிரத்து 698 களப் பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.