தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிரந்தர பணிநீக்கம் ? - சிறையில் அடம் பிடித்த சவுக்கு சங்கர் - எச்சரிக்கை நோட்டீஸ்

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் பேரில் சவுக்கு சங்கருக்கு முதற்கட்டமாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 24, 2022, 5:09 PM IST

Updated : Sep 24, 2022, 5:23 PM IST

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர், கடந்த 2003ஆம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு இவர் மீதான வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இதனால், இதுவரையில் அவருக்கு அரசாங்கம் ஊதியமாக மாதம் ரூ.40,000 வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஆஜரான சவுக்கு சங்கருக்கு எப்படி 40 ஆயிரம் ரூபாய் அரசு சம்பளம் வழங்கி வருகிறது? அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியது. அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர், சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணிநீக்கம் செய்வதற்கான எச்சரிக்கை நோட்டீசை வழங்கினர்.

இந்த நோட்டீசை அவர்கள் சிறை அதிகாரியுடன் சேர்ந்து சவுக்கு சங்கருக்கு வழங்க சென்றபோது அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார் என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து அந்த எச்சரிக்கை நோட்டீஸ் அவர் சிறையில் இருக்கும் அறை வாசலில் ஒட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சவுக்கு சங்கர் அளிக்கும் பதில் ஏற்றுக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தால் அவரை பணியிலிருந்து நீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுக்கு சங்கர் இது நாள் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு பாதி சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘ராகுல் காந்தி காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்’ - எல். முருகன்

Last Updated : Sep 24, 2022, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details