தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி சிலை திறப்பு; திரண்டு வந்த திரை நட்சத்திரங்கள்! - சென்னை ஒமந்தூரார்

சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி குடும்பத்தினர், அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநதிகள், திரை பிரபலங்கள், கூட்டணி காட்சியை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது
கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது

By

Published : May 28, 2022, 10:54 PM IST

சென்னை: ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்தச் சிலையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். சிலை திறப்புக்கு பின் கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் குடும்பத்தினர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திரை பிரபலங்கள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், நடிகர்கள் சத்யராஜ், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் மதிவேந்தன், செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட இளைய அமைச்சர்கள் முன் வரிசையில் அமரவைக்கப்பட்ட நிலையில் மூத்த அமைச்சர்களான ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சக்கரபாணி, ரகுபதி மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பின் வரிசையில் அமரவைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 5 அமைச்சர்களை முன் வரிசையில் அமரும் படி அழைத்தும் அதை ஏற்காமல் பின் வரிசையிலேயே அமர்ந்து கொண்டனர். இன்று (மே28) காலை நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேடையில் அமர்ந்த மூத்த அமைச்சர்கள் அரசு விழாவில் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டது நிகழ்வு சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:16 அடி உயர கருணாநிதி சிலை திறப்பு

ABOUT THE AUTHOR

...view details