சென்னை: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தேசிய சீட்டு நிதி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக அனைந்து இந்திய சீட்டு நிதி சங்கம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சீட்டு நிதி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நடப்பாண்டில் சிறப்பாக பங்காற்றிய நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி; "கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தேசிய சீட்டு நிதி தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் மக்கள் வங்கியில் சென்று சேமிப்பதை விட சீட்டு நிறுவனங்களுக்கு சென்று சேமித்தது அதிகம்.
முறையாக பதிவு செய்யாமல் மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றும் சில நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அவற்றை முறையாக கையாளும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீட்டு நிதி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மக்கள் சேமிப்பில் பெரும் உதவியாக இருந்து வருகிறது.
கிராமப்புறங்களில் சேமிப்பை சிறுசேமிப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சீட்டு நீதி நிறுவனங்களின் பங்கும் அதிகம். நிறுவனங்கள் பதிவு செய்யும் பொழுது தாமதங்களும், சில சிக்கல்களும் ஏற்படுகின்றன என கூறினீர்கள். விரைவில் அவை நிவர்த்தி செய்யப்படும். தற்போது வீட்டுமனை, பட்டா, நிறுவனங்கள் பதிவு போன்றவை அனைத்தும் ஒரே இடத்தில் பதிவு செய்யப்படுவதால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆன்லைன் பதிவு செய்வதில் 2.0 மென்பொருள் பயன்பாட்டில் அடுத்த 6 மாதத்தில் 3.0 மென்பொருள் சேவை பயன்பாட்டில் கொண்டு வர உள்ளோம். இதன் காரணமாக பதிவித்துறையின் வேகம் அதிகரிக்கும்.