தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளம் கடக்க முயன்ற இருவர் மீது ரயில் மோதி  உயிரிழப்பு - train accident news

அம்பத்தூர் தண்டவாளத்தை கடக்கும்போது அதிவேகமாக வந்த மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலே இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தண்டவாளம் கடக்க முயன்ற இருவர் மீது ரயில் மோதி பலி!
தண்டவாளம் கடக்க முயன்ற இருவர் மீது ரயில் மோதி பலி!

By

Published : Jun 24, 2021, 4:41 PM IST

Updated : Jun 24, 2021, 5:06 PM IST

அம்பத்தூர்- பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று (ஜூன். 23) இரவு இளைஞர்கள் இருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த பெரம்பூர் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவின் இயக்குநர்களுக்கான தேர்தலை நடத்தக் கூடாது’ - நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Jun 24, 2021, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details