தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் போக்குவரத்து விதியை மீறுவோர் கவனத்திற்கு! - பதிவெண் அடையாளம் காணும் கேமரா

போக்குவரத்து போலீசார் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தொடர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 69 பேரை நேரில் அழைத்ததில் 35 பேர் கலந்து கொண்டனர். இதில் 6 பேர் அபராத தொகையை உடனடியாக செலுத்தினர்.

தொடர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 69 பேரை நேரில் அழைத்த போக்குவரத்து போலிசார்
தொடர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 69 பேரை நேரில் அழைத்த போக்குவரத்து போலிசார்

By

Published : Dec 16, 2022, 2:10 PM IST

Updated : Dec 16, 2022, 2:35 PM IST

சென்னை:போக்குவரத்து காவல் பகுதிக்கு உட்பட்ட 11 சந்திப்புகளில், வாகன பதிவெண்ணை அடையாளம் காணும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல், E-Challan முறையில் வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் செல்வது, மூன்று பேர்கள் பயணிப்பது, எதிர்த்திசையில் வாகனத்தை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதில், என்எஸ்சி போஸ் சாலை, வெலிங்டன் சாலை, அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை, ஆர்கே மட் சாலை, சின்னமலை, எஸ் ஐ இ டி கல்லூரி சந்திப்பு, கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணா சாலை மற்றும் எல்டம்ஸ் சாலை சந்திப்பு உள்ளிட்ட 15 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விதிமீறல்களில் ஈடுபட்ட 69 வாகன ஓட்டிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதில் 35 பேர் சென்னை காவல் ஆணையர கூட்டரங்கிற்கு வரவழைக்கப்பட்டனர்.

போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரியின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறிய 35 பேரில், 6 பேர்கள் 4200 ரூபாயை Paytm மூலம் அபராத தொகையை உடனடியாக செலுத்தினர். இது மட்டுமல்லாது மீதம் கட்டணம் செலுத்துவதாகக் கூறி சென்றவர்களுக்கு, திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதிகளை மதித்து நடக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: சென்னையில் ஹெல்மட் அணிந்து சென்ற தம்பதிக்கு வெகுமதி

Last Updated : Dec 16, 2022, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details