சென்னை:தமிழ்நாட்டில் திரையரங்குகளில் மூன்று விதமாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. மல்டி பிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தப்பட்டு அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் ஜிஎஸ்டி உள்பட 190 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த டிக்கெட் கட்டணமே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர் இந்த மனுவை அளித்துள்ளனர். அதன்படி மல்டி பிளக்ஸ் ஏசி தியேட்டரில் 150 ரூபாய் டிக்கெட்டை 250 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்றும் மல்டி பிளக்ஸ் ஏசி இல்லாத தியேட்டரில் குறைந்தபட்ச கட்டணத்தை 150 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்றும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி இல்லாத தியேட்டர்களில் கட்டணத்தை 80 ரூபாயில் இருந்து 120 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பொங்கல் விருந்தாக வரும் இரண்டு பான் இந்தியா படங்கள்... அட கமல்ஹாசன் படமும் ரிலீஸ் ஆகுதுபா?