சென்னை:தமிழ்நாட்டிற்கு 2011ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி வந்தார். அப்போது பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய முயற்சி, உள்ளிட்ட வழக்குகளில் பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி பிலால் மாலிக்கை இன்று (செப்.18) காலை திடீரென சாரைப் பாம்பு ஒன்று கடித்தது. கடித்த பாம்பை பிலால் மாலிக் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பயங்கரவாதியான பிலால் மாலிக்கின் உயிருக்கு ஆபத்து உள்ளதா? என பரிசோதிக்க, பலத்த பாதுகாப்புடன் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிலால் மாலிக்கின் உயிருக்கு ஆபத்தில்லை எனவும், அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவில் சிறைக்கு திருப்பி கொண்டு செல்லப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என். ரவி