சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக் 17) காலை 10 மணிக்குகூடுகிறது. இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களுக்கான இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதன்பின் சட்டப்பேரவை தொடர் நடத்த உள்ள நாட்கள் பற்றிய முடிவு எடுக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படும்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் நிலை, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான நிரந்தர மசோதா ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.