இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசத் தந்தை காந்தியை சுட்டுக் கொன்றவன் நாதுராம் கோட்சே. ஆனால் பழியை இஸ்லாமியர்கள் மீது போடுவதற்காக, நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்லாமியப் பெயரை பச்சைக் குத்திக் கொண்டான். என்னே அவனது ராஜதந்திரம். அவனது தந்திரத்திற்கு கொஞ்சம் கூட சளைக்காததுதான் பாஜகவின் தந்திரமும். 2009ஆம் ஆண்டு இந்திய அரசின் துணையோடு இலங்கையில் சுமார் 1.5 லட்சம் ஈழத் தமிழர்கள் கொன்று குவித்தார் ராஜபக்சே.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு; வேல்முருகன் கண்டனம்! - தடை
சென்னை: இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்புக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி
இதனை காங்கிரசும், திமுகவும் செய்தது என கூறிக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக. ஆனால் இனப்படுகொலைக்கு பாஜக சார்பில் சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அதற்கு மாற்றாக இலங்கை அரசிற்கு மறைமுகமாக துணை நின்றுள்ளது. தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கும் பாஜகவினர்தான் காரணம். இந்த தடை நீட்டிப்பை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாக கண்டிக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.
Last Updated : May 15, 2019, 5:43 PM IST