சென்னை:திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையினை மூன்று முறை மாற்றம் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளை இடம்மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டு அதிரடி காட்டி உள்ளார்.
- முதலமைச்சரின் தனிச்செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்;
- முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐஏஎஸ், நிதித்துறை செயலாளராக நியமனம்;
- உள்துறைச் செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம்;
- சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்;
- ஜெகநாதன் உணவுப் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமனம்;
- பணீந்தரரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்;
- சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த ககன்சிங் பேடி ஐஏஎஸ், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக நியமனம்;
- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் ஐஏஎஸ், ஊரக வளர்ச்சி செயலாளராக நியமனம்;
- பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த மணிவாசகன் ஐஏஎஸ், சுற்றுலாத்துறை, மற்றும் இந்து அறநிலையத்துறை செயலாளராக நியமனம்;
- சுற்றுலாத்துறை, மற்றும் இந்து அறநிலையத்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் ஐஏஎஸ், பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம்;
- பள்ளிக்கல்வித் துறை ஆணையராக இருந்த நந்தகுமார் ஐஏஎஸ், மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளராக நியமனம்;
- மனித வள மேம்பாட்டுத் துறை செயலாளராக மைதிலி ஐஏஎஸ், இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதியின் இயக்குநராக நியமனம்;
- இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதியின் இயக்குநராக இருந்த கணேஷ் ஐஏஎஸ், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறையின் இயக்குநராக நியமனம்;
- போக்குவரத்து துறை செயலாளராக இருந்த கோபால் ஐஏஎஸ், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை செயலாளராக நியமனம்.
இதையும் படிங்க:உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் - அண்ணாமலையை சீண்டிய தருமபுரி எம்.பி.!